Sep 28, 2026
Thisaigal NewsYouTube
ஷா ஆலாம் அடுக்குமாடி குடியிருப்பின் 7-வது மாடியிலிருந்து விழுந்த 14 வயது சிறுவன் மரணம்
தற்போதைய செய்திகள்

ஷா ஆலாம் அடுக்குமாடி குடியிருப்பின் 7-வது மாடியிலிருந்து விழுந்த 14 வயது சிறுவன் மரணம்

Share:

ஷா ஆலாம், மார்ச்.25-

ஷா ஆலாம், செக்‌ஷன் 19 பகுதியில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது மாடியில் இருந்து விழுந்ததாக நம்பப்படும் 14 வயது சிறுவன் நேற்று பிற்பகல் உயிரிழந்தார்.

நேற்று மாலை சுமார் 4.20 மணியளவில் கட்டிடத்தின் கீழ் பகுதியில் சுயநினைவிழந்த நிலையில் பொதுமக்களால் கண்டறியப்பட்ட அவர், உடனடியாக ஷா ஆலாம் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார்.

இருப்பினும், மாலை 5.40 மணியளவில் அவர் உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து மாலை 6.44 மணியளவில் போலீசாருக்குத் தகவல் கிடைத்ததாக ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ரம்சே எம்போல் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், சந்தேகத்திற்குரிய வகையில் எந்தவித அறிகுறிகளும் கண்டறியப்படாத நிலையில், இவ்வழக்கு 'திடீர் மரணம்' என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மரணத்திற்கான உண்மையான காரணத்தை அறிய இன்று சவப் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

Related News

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு  எம்.சரவணன் விமர்சனம்

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு எம்.சரவணன் விமர்சனம்