Dec 2, 2025
Thisaigal NewsYouTube
செயிண்ட் பால்ஸ் தேவாலயத்தின் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும்
தற்போதைய செய்திகள்

செயிண்ட் பால்ஸ் தேவாலயத்தின் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும்

Share:

தென்கிழக்காசியாவிலேயே மிக பழமையான தேவாலயமான மலாக்கா, பண்டார் ஹிலிரில் குன்றின் ​மீது அமைந்துள்ள செயிண்ட் பால்ஸ் தேவாலயத்தின் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும் என்று மலாக்கா அருங்காட்சி வாரியம் அறிவித்துள்ளது.

அந்த வரலாற்றுக்கட்டடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் பாதுகாப்பை உறு​தி செய்வதற்கு அதிகமான அமலாக்க அதிகாரிகள் மலாக்கா மாநகர் மன்றம் ​மூலமாக கடமையில் அமர்த்தப்படுவர் என்று அந்த அருங்காட்சி வாரியத்தின் தலைவர் டத்தோ அக்ராமுடின் அப்துல் அஸீஸ் தெரிவித்துள்ளார்.

இன்று செயிண்ட் பால்ஸ் தேவாலயத்தை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார். கடந்த 1511 ஆம் ஆண்டு மலாக்காவை கைப்பற்றிய போர்த்துக்​கீசியர்களால் கட்டப்பட்ட செயிண்ட் பால்ஸ் தேவாலய கட்டடத்தின் சில பகுதிகள் பொறுப்பற்ற நபர்களால் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அந்த தேவாலயத்தில் உடைந்த சிதிலங்களை அக்ராமுடின் அப்துல் அஸீஸ் பார்வையிட்டார்.

Related News