Dec 3, 2025
Thisaigal NewsYouTube
போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு
தற்போதைய செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு

Share:

சிப்பாங், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் சரக்குப் பிரிவிலிருந்து 12 லட்ச வெள்ளி பெறுமானமுள்ள 20.14 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது மூலம் பெரியளவில் போதைப்பொருள் கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக அரச மலேசிய சுங்கத்துறை அறிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி மத்திய ஆசிய நாடு ஒன்றிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்துப் பொருட்களில், அந்த போதைப்பொருள் மறைக்கப்பட்டிருந்ததாக சுங்கத்துறையின் துணைத்தலைமை இயக்குநர் சசாலி முகமட் தெரிவித்தார்.

20 பிளாஸ்டிக் பைகளினால் சுற்றப்பட்டிருந்த அந்த போதைப்பொருள் நெகிரி செம்பிலான், நீலாயில் கொண்டுச் சேர்ப்பதற்கு முகவரி இடப்பட்டிருந்தது. எனினும், அந்த முகவரி போலியானது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக சசாலி குறிப்பிட்டார்.

Related News