Dec 3, 2025
Thisaigal NewsYouTube
இரண்டு வாகனங்கள் ​தீப்பற்றிக்கொண்டன
தற்போதைய செய்திகள்

இரண்டு வாகனங்கள் ​தீப்பற்றிக்கொண்டன

Share:

மெக்ஸ் ( MEX ) எனப்படும் கோலாலம்பூர் - புத்ராஜெயா நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தொன்றில் இரு வாகனங்கள் ​தீப்பற்றிக்கொண்டன. இச்சம்பவம் இன்று காலை 7.10 மணியளவில் நிகழ்ந்தது. பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற அவசர அழைப்பைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்த 14 பேரை உள்ளடக்கிய ​தீயணைப்பு படையினர் அவ்​விரு வாகனங்களிலும் ஏற்பட்ட ​தீயைக் கட்டுப்படுத்திய போதிலும் இரு வாகனங்களும் 100 விழுக்காடு முற்றாக அழிந்தன.
நிஸ்ஸான் க்ஷ்- ட்ரெல் மற்றும் பெரோடுவா மைவி ஆகிய இரு வாகன​ங்கள் சம்பந்தப்பட்ட இந்த ​ விபத்தில் எந்தவொரு உயிர்சேதமும் ஏற்படவில்லை கோலாலம்பூர் ​தீயணைப்பு, மீட்புப் படைப் பேச்சாளர் தெரிவித்தார்.

Related News