Jul 27, 2026
Thisaigal NewsYouTube
சீனக்கோவில்சிலைகளை சேதப்படுத்தியதாக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்
தற்போதைய செய்திகள்

சீனக்கோவில்சிலைகளை சேதப்படுத்தியதாக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்

Share:

மன்ஜோங், ஏப்ரல் 7 -

மன்ஞோங், கம்பூங் கோ, தோகோங் கில் உள்ள சிலையை சேதப்படுத்திய சம்பவத்தை தொடர்ந்து நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் இச்சம்பவம் குறித்து தமது தரப்புக்கு புகார் கிடைக்க பெற்றதாக மன்ஜோங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி மொஹாமாட் நோர்டின் அப்துல்லா தெரிவித்தார்.

நபர் ஒருவர் கோவில் சிலையை சேதப்படுத்துவதாக சமூக வலைத்தளங்களில் பரவலாக வைரலாகிய காணொளி குறித்து, 56 வயதுடைய பெரியவர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்நபர் கைது செய்யப்பட்டிருப்பதாக மொஹாமாட் நோர்டின் கூறினார்.

அப்புகாரை தொடர்ந்து நேற்று இரவு 9.30 மணியளவில் 35 வயதுடைய ஆடவரை தைபிங் கில் குற்றப் புலனா‌ய்வு பிரிவின் மன்ஜோங் மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் உறுப்பினர்கள் கைது செய்ததாக அவர் குறிப்பிட்டார்.

காணொளி எடுக்க பயன்படுத்தப்பட்ட தொலைபேசியையும் அந்நபரிடமிருந்து போலீசார் பறிமுதல் செய்ததாக மொஹாமாட் நோர்டின் தெளிவுபடுத்தினார்.

மற்ற சமயத்தை அவமதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக குற்றவியல் சட்டம் 295 பிரிவின் கீழ் அந்நபர் விசாரணை மேற்கொண்டு வருவதாக மொஹாமாட் நோர்டின் மேலும் தகவல் தெரிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்