Sep 28, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவில் எரிபொருள் போதுமான அளவில் உள்ளது; பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம்” – அமைச்சர் தகவல்
தற்போதைய செய்திகள்

மலேசியாவில் எரிபொருள் போதுமான அளவில் உள்ளது; பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம்” – அமைச்சர் தகவல்

Share:

கோத்தா கினபாலு, மார்ச்.25-

மலேசியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் LPG எரிவாயு விநியோகமானது தற்போது நிலையாக உள்ளதாக உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கை செலவீன அமைச்சர் டத்தோ அர்மிஸான் முஹமட் அலி தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் இதுவரை எந்தவித பற்றாக்குறையும் பதிவாகவில்லை என்பதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், பொதுமக்கள் யாரும் அது குறித்துப் பதற்றமடைய வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பண்டிகைக் காலங்களில் தேவைகள் அதிகரித்ததால் சில இடங்களில் சில மணி நேரங்கள் மட்டுமே விநியோகத் தாமதங்கள் ஏற்பட்டதாகவும், அவை போக்குவரத்து சிக்கல்கள் காரணமாக இருந்ததாகவும் அர்மிஸான் விளக்கமளித்துள்ளார்.

தற்போது அந்தச் சிக்கல்களும் தீர்க்கப்பட்டு விநியோகம் சீராக நடைபெறுவதற்காக தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related News

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு  எம்.சரவணன் விமர்சனம்

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு எம்.சரவணன் விமர்சனம்