மைகாட் அடையாள அட்டையை மூன்றாவது முறையாக தொலைத்தால் ஆயிரம் வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படும் என்று தேசிய பதிவு இலாகாவான ஜே.பி.என் தலைமை இயக்குநர் சம்ரி மிஸ்மான் தெரிவித்துள்ளார்.
ஆண்டு தோறும் நாடு முழுவதும் சராசரி 8 ஆயிரம் மைகாட் அட்டைகள் காணாமல் போவதாக தேசிய பதிவு இலாகா புகார்களை பெறுவதாக அவர் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு ஆண்டும் சராசரி 2 லட்சம் மைகாட் அடையாள அட்டைகளை தேசிய பதிவு இலாகா வெளியிடுகிறது. இதில் சராசரி 4 விழுக்காடு அட்டைகள் தொலைக்கப்படுவதாக பொது மக்களிடமிருந்து புகார்கள் பெறப்படுகின்றன என்று சம்ரி மிஸ்மான் தெரிவித்தார்.
மைகாட் அடையாள அட்டை தொலைக்கப்படும் பட்சத்தில் அந்த முக்கிய அடையாள ஆவணம், பொறுப்பற்ற நபர்களால் தவறாக பயன்படுத்தும் சாத்தியம் உள்ளது. எனவே அந்த அதிகாரத்துவ ஆவணைத்தை பொது மக்கள் பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் அபராதத் தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்தார்.

தற்போதைய செய்திகள்
மைகாட் அடையாள அட்டையை மூன்றாவது முறையாக தொலைத்தால் ஆயிரம் வெள்ளி வரை அபராதம்
Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


