Dec 4, 2025
Thisaigal NewsYouTube
எந்தவொரு விண்ணப்பமும் பெறப்படவில்லை
தற்போதைய செய்திகள்

எந்தவொரு விண்ணப்பமும் பெறப்படவில்லை

Share:

நாளை மறுநாள் செப்டம்பர் 16 ஆம் தேதி மலேசியத்தினத்தையொட்டி கோலாலம்பூர் மாநகரில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படும் ஆட்சேப பேரணி தொடர்பில் போலீஸ் துறை இதுவரையில் எந்தவொரு விண்ணப்பத்தையும் பெறவில்லை என்று கோலாலம்பூர் மாநகர் போலீஸ் தலைவர் டத்தோ அல்லாவுதீன் அப்துல் மஜித் தெரிவித்துள்ளார்த.

2012 ஆம் ஆண்டு அமைதி பேரணி சட்டத்தின் கீழ் இது போன்ற பேரணி நடத்த திட்டமிட்டுள்ளவர்கள் போலீஸ் துறையிடம் அனுமதி பெறுவது அவசியமாகும். குறிப்பாக பேரணி நடைபெறுவதற்கு 5 நாட்களுக்கு முன்பு இந்த அனுமதியை பெற்றாக வேண்டும்.

ஆனால், இந்த பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளவர்கள் இதுவரை அனுமதி கேட்டு விண்ணப்பிக்கவில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.

Related News