GHRF எனப்படும் உலகலாவிய மனித உரிமை சம்மேலனத்தின் தலைமையில், 62 அரசாங்க சார்பற்ற அமைப்புகள் ஒன்றிணைந்து, Putrajaya வில் உள்ள பிரதமர் துறையில், இன்று மாலையில் 3 மகஜர்களைச் சமர்ப்பித்தன.
முஸ்லீம் அல்லாத பிற மதத்தினரை இழிவுப்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்தல், அத்தகைய இழிவுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட சர்ச்சைக்குரிய சமயப் போதகர்களான Zambry Vinoth Kalimuthu, மற்றும் Firdaus Wong போன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது உட்பட 3 முக்கிய விவகாரங்களை முன்னிறுத்தி இந்த மகஜர், பிரதமர் Dato Sri Anwar Ibrahim அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.அந்த சமேளனத்தின் தலைவர் S. Sasikumar தலைமையில் 62 இயக்கங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் ஒன்றிணைந்து இந்த மகஜரைச் சமர்பித்தனர்.
பிற மதத்தினரை இழிவுப்படுத்தும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதே வேளையில், மத வெறுப்புணர்ச்சியைத் தூண்டும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க, இன மற்றும் சமயம் சார்ந்த புதிய சட்டம் ஒன்று இயற்றப்பட வேண்டும் என்று அந்த 62 அமைப்புகளும் கோரிக்கை விடுத்தன.
முன்னதாக, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து, அந்த அமைப்புகளைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் பிரதமர் அலுவலகத்தின் முன் தங்கள் ஆட்சேபத்தைப் பதிவு செய்தனர்.








