Mar 20, 2026
Thisaigal NewsYouTube
பொதுச்சேவை ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பை விவாதமாக்க வேண்டாம்
தற்போதைய செய்திகள்

பொதுச்சேவை ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பை விவாதமாக்க வேண்டாம்

Share:

சிலாங்கூர், மே 02-

நேற்று, தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, பொதுச்சேவை ஊழியர்களுக்கான சம்பளத்தை 13 விழுக்காட்டிற்கும் கூடுதலாக அதிகரித்திருப்பதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வெளியிட்டுள்ள அறிவிப்பை, எத்தரப்பும் விவாதமாக்கக்கூடாது என மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவுறுத்தினார்.

பொதுச்சேவை ஊழியர்கள் நாட்டின் முதன்மை பணியாளர்களாவர். சிறந்த வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்றால், நாட்டின் பொருளாதாரத்தை முதலில் வலுப்பெற செய்வது அவசியமாகின்றது. அதற்கு, பொதுச்சேவை ஊழியர்களின் செயல் மற்றும் உற்பத்தி திறன்கள் அதிகரிக்கப்பட வேண்டும்.

சம்பள உயர்வின் வழி, அத்தரப்பினரின் உத்வேகமும் பணியிடங்களில் செயல்திறன்களும் அதிகரிக்கும் என ஸ்டீவன் சிம் கூறினார்.

ஒற்றுமை அரசாங்கம், பொதுச்சேவை ஊழியர்கள் மட்டுமின்றி, அனைத்து தரப்பு தொழிலாளர்களின் நலன்களையும் பேணுகின்றது.

தனியார் துறைகளில் உற்பத்தி திறன் அதிகரிப்புக்கு ஏற்ப, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கில், முன்னேற்றக் சம்பளத் திட்டக் கொள்கையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் வழி, குறைந்த பட்ச சம்பள விகிதம் மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதை ஸ்டீவன் சிம் சுட்டிகாட்டினார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து