Jul 10, 2026
Thisaigal NewsYouTube
தேர்தல் வெற்றிக்குப் பிறகே ஜோகூர் முதலமைச்சர் வேட்பாளர் தீர்மானிக்கப்படுவார்: அந்தோனி லோக்
தற்போதைய செய்திகள்

தேர்தல் வெற்றிக்குப் பிறகே ஜோகூர் முதலமைச்சர் வேட்பாளர் தீர்மானிக்கப்படுவார்: அந்தோனி லோக்

Share:

ஜோகூர் மாநிலத் தேர்தலுக்குப் பிறகு, கூட்டணியின் உயர்மட்டக் குழுவே ஜோகூர் மந்திரி பெசார் வேட்பாளரைத் தீர்மானிக்கும் என பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் துணைத் தலைவர் அந்தோனி லோக் தெரிவித்துள்ளார். தற்போதைய முக்கிய கவனம் கூட்டணியின் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வது மட்டுமே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று நடைபெற்ற ஜொகூர் ஜெயா மற்றும் திராம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிமுக விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் வேட்பாளர் குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்றார். இந்த விழாவில் ஜோகூர் ஜெயா தொகுதிக்கு நூர் சுலைலா அப்த் கனியும், தீராம் தொகுதிக்கு லீ வெர்ன் யிங்கும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

தேர்தல் விளம்பர முகமாக யார் இருப்பார் என்ற கேள்விக்கு பதிலளித்த அந்தோனி லோக், தங்களின் இலக்கு வெற்றி பெறுவது மட்டுமே என்றும், போட்டியிடும் ஒவ்வொரு தொகுதியிலும் அந்தந்த வேட்பாளர்களே தேர்தல் முகமாக விளங்குவார்கள் என்றும் கூறினார்.

Related News

கொலைகுற்றச்சாட்டு: மூவரை எதிர்வாதம் புரிய உயர் நீதிமன்றம் உத்தரவு

கொலைகுற்றச்சாட்டு: மூவரை எதிர்வாதம் புரிய உயர் நீதிமன்றம் உத்தரவு

அனைத்து மாநிலங்களிலும் ட்ரோன் பிரிவுகள்: குடிநுழைவுத் துறை அதிரடி திட்டம்!

அனைத்து மாநிலங்களிலும் ட்ரோன் பிரிவுகள்: குடிநுழைவுத் துறை அதிரடி திட்டம்!

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை