Jul 16, 2026
Thisaigal NewsYouTube
கெடாவில் 12 நாட்களாக காணப்போன நபர் ரப்பர் தோட்டத்தில் சடலமாக மீட்பு
தற்போதைய செய்திகள்

கெடாவில் 12 நாட்களாக காணப்போன நபர் ரப்பர் தோட்டத்தில் சடலமாக மீட்பு

Share:

கெடா மாநிலம் பாலிங் பகுதியில் கடந்த 12 நாட்களாக காணாமல் போனதாகக் கூறப்பட்ட 58 வயது ஆடவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று ஃபெல்டா தெலோய் கானான் சந்திப்புக்கு அருகிலுள்ள ரப்பர் தோட்டப் பகுதியில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இது குறித்து பாலிங் மாவட்ட போலீஸ் ரிச்சர்ட் ஜோ வெளியிட்டுள்ள தகவலில், மீட்கப்பட்ட அச்சடலமானது கடந்த 12 நாட்களாக காணாமல் போயிருந்த 58 வயது நபருடையது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்தில் கிடைத்த அடையாள அட்டை மற்றும் மோட்டார் சைக்கிளை வைத்து உயிரிழந்த நபரின் அடையாளம் காணப்பட்டதாகவும் ரிச்சர்ட் ஜோ தெரிவித்துள்ளார்.

மேலும், பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பின்னர் உயிரிழப்புக்கான துல்லியமான காரணம் தெரியவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News