Jun 22, 2026
Thisaigal NewsYouTube
போதைப் பொருட்கள் கூரியரில் அனுப்பப்படுகின்றன - குற்றவியல் நிபுணர் எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

போதைப் பொருட்கள் கூரியரில் அனுப்பப்படுகின்றன - குற்றவியல் நிபுணர் எச்சரிக்கை

Share:

போதைப்பொருள் கடத்தல் கும்பல்களானது, தங்களின் வாடிக்கையாளர்களுடன் நேரடி சந்திப்புகளைத் தவிர்த்து, போலீசாரிடம் பிடிபடும் அபாயத்தைக் குறைக்கும் வகையில், தற்போது கூரியர் சேவைகளைப் பயன்படுத்தி போதைப்பொருட்களை விநியோகிக்கும் புதிய முறைகளை கையாளத் தொடங்கியுள்ளதாக குற்றவியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இது குறித்து மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குற்றவியல் நிபுணரான நூர் ஹஃபிஸா யூசோஃப் வெளியிட்டுள்ள தகவலில், இந்த நடைமுறை உலகளவில் புதிதல்ல என்றாலும், மலேசியாவில் அண்மையக் காலமாக அதிக கவனம் பெறத் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

வாடிக்கையாளர்களை நேரடியாகச் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லாததால், குற்றவாளிகள் தங்களின் அடையாளத்தை மறைத்துக் கொண்டு செயல்படுவது எளிதாகி வருவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், போதைப்பொருட்களை, பொம்மைகள், தனிநபர் பராமரிப்புப் பொருட்கள் மற்றும் பிற நுகர்வோர் பொருட்களுக்குள் மறைத்து அனுப்பும் தந்திரத்தை இந்தக் கும்பல்கள் பயன்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால், கூரியர் நிறுவனங்கள் மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகள் கண்காணிப்பை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related News

கெடாவில் 12 நாட்களாக காணப்போன நபர் ரப்பர் தோட்டத்தில் சடலமாக மீட்பு

கெடாவில் 12 நாட்களாக காணப்போன நபர் ரப்பர் தோட்டத்தில் சடலமாக மீட்பு

நாடாளுமன்றத்தில் மீண்டும் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றார் ஹம்சா சைனுடின்

நாடாளுமன்றத்தில் மீண்டும் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றார் ஹம்சா சைனுடின்

திரங்காணுவில் 15 வயது மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது

திரங்காணுவில் 15 வயது மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது

சிங்கப்பூர் கூட்டுத் திட்ட நிறுவன விவகாரம்: வழக்கை மீண்டும் தாக்கல் செய்ய இந்திய நீதிமன்றம் அறிவுறுத்தல்

சிங்கப்பூர் கூட்டுத் திட்ட நிறுவன விவகாரம்: வழக்கை மீண்டும் தாக்கல் செய்ய இந்திய நீதிமன்றம் அறிவுறுத்தல்

சிலாங்கூரில் 4 நாட்கள் சிறப்பு நடவடிக்கை - தேடப்பட்டு வந்த 39 பேர் கைது

சிலாங்கூரில் 4 நாட்கள் சிறப்பு நடவடிக்கை - தேடப்பட்டு வந்த 39 பேர் கைது

வங்காள தேச பிரதமர் தாரிக் ரஹ்மான் மலேசியா வருகை / இருநாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்த இருதரப்பு பேச்சுவார்த்தை

வங்காள தேச பிரதமர் தாரிக் ரஹ்மான் மலேசியா வருகை / இருநாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்த இருதரப்பு பேச்சுவார்த்தை