Jul 18, 2026
Thisaigal NewsYouTube
திரங்காணுவில் 15 வயது மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது
தற்போதைய செய்திகள்

திரங்காணுவில் 15 வயது மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது

Share:

திரங்காணு மாநிலம் செட்டியூ பகுதியில், தனது 15 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் 50 வயது தந்தை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக, அச்சிறுமி அளித்த புகாரைத் தொடர்ந்து, சந்தேக நபர் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக மாவட்ட போலீஸ் தலைவர் ஸஹ்ரில் அஸ்ரி ஜைன் தெரிவித்துள்ளார்.

அப்புகாரின் படி, கடந்த மே 29-ஆம் தேதி மதியம், வீட்டில் தனது இளைய சகோதரியுடன் இருந்த சிறுமியை அவரது தந்தை தனது அறைக்கு அழைத்ததாகக் கூறப்படுகின்றது.

பின்னர், அச்சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அந்நபர், யாரிடமும் இது பற்றி கூறக் கூடாது என்று கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News