நாடாளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக டத்தோ ஸ்ரீ ஹம்சா சைனுடின் மீண்டும் பொறுப்பேற்றுள்ளார்.
அவரது பதவியானது கடந்த ஜூன் 18-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக நாடாளுமன்ற சபாநாயகர் தான் ஸ்ரீ ஜொஹாரி அப்துல் அறிவித்துள்ளார்.
இன்று 15-ஆவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வின் இரண்டாவது கூட்டத்தொடரைத் தொடக்கி வைத்த போது, ஜொஹாரி அப்துல் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
கடந்த நாடாளுமன்ற அமர்வுக்குப் பிறகு ஏற்பட்ட பல்வேறு மேம்பாடுகள் மற்றும் நாடாளுமன்ற நிலையான ஆணை 4A(3) விதிகளின் கீழ் கிடைத்த அறிவிப்புகளைப் பரிசீலித்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மே 20-ஆம் தேதி வரை, ஹம்சா சைனுடின் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்து வந்த நிலையில், மே 21 முதல் ஜூன் 10-ஆம் தேதி வரை கெமாமான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமத் சம்சூரி மொக்தார் அப்பொறுப்பை ஏற்றிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, ஜூன் 18 முதல் ஹம்சா சைனுடின் மீண்டும் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.








