Jul 10, 2026
Thisaigal NewsYouTube
வெளிநாடுகளில் பிறக்கும் மலேசியத் தாயார்களின் குழந்தைகளுக்கு தானியங்கி  முறையில் குடியுரிமை
தற்போதைய செய்திகள்

வெளிநாடுகளில் பிறக்கும் மலேசியத் தாயார்களின் குழந்தைகளுக்கு தானியங்கி முறையில் குடியுரிமை

Share:

வெளிநாட்டினரைத் திருமணம் செய்த மலேசியத் தாய்மார்களின் வெளிநாடுகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தானியங்கி முறையில் குடியுரிமை வழங்குவது எப்போது என்பது குறித்த இறுதி கட்ட முடிவை அரசாங்கம் எடுத்து வருவதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட இவ்விவகாரம் மீதான அரசியலமைப்பு சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னதாக இறுதிச் செயல்முறைகளுக்காக தற்போது தாங்கள் காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்துறை அமைச்சை பொறுத்தவரை அதன் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் மற்றும் தேவையான படிவங்கள் உள்ளிட்ட அனைத்து ஆயத்தப் பணிகளும் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாகவும் சைபுடின் கூறினார்.

இதற்கு முன் இத்தகைய குழந்தைகள் பதிவின் மூலமே மலேசியக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க வேண்டியிருந்தது. ஆனால் இந்தத் திருத்தம் நடைமுறைக்கு வந்தவுடன் சட்டத்தின்படி குழந்தைகளுக்கு தானியங்கி முறையில் குடியுரிமை கிடைக்கும் என்பதால், தாயார்கள் இனி நீதிமன்றத்தில் போராடவோ அல்லது குடியுரிமைக்காக விண்ணப்பிக்கவோ தேவையில்லை என்று அமைச்சர் விளக்கியுள்ளார்.

Related News

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

  101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்

101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்