Dec 3, 2025
Thisaigal NewsYouTube
சித்ரவதைக் ஆளான இந்தியப் பெண் உடல் நலம் தேறி வருகிறார்
தற்போதைய செய்திகள்

சித்ரவதைக் ஆளான இந்தியப் பெண் உடல் நலம் தேறி வருகிறார்

Share:

சொந்தச் சகோதரி மற்றும் அவரின் கணவரால் சித்ரவதைக்கு ஆளானதாக நம்பப்படும் 18 வயது பரமேஸ்வரி செல்லகுமாரன், தற்போது சிகமாட் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப்பெற்று வருகிறார்.அந்தப் பெண்ணை இன்று நேரில் சென்று நலம் விசாரித்த சிகமாட் எம்.பி. ஆர். யுனேஸ்வரன், அப்பெண்ணை சமூக நல இலாகாவின் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்ப்பதாக தெரிவித்தார்.

ஜோகூர், சிகமாட் பத்து 6, லாடாங் தம்பாங் தோட்டத்தில் தமது சகோதரியில் இல்லத்தில் தங்கியிருந்த அந்த இளம் பெண் சொந்த சகோதரியாலும், அவருடைய கணவராலும் சித்ரவதை செய்யப்பட்டு வந்ததாக வாக்குமூலம் தந்துள்ளார்.

கண்களின் கீழ்ப்பகுதியிலும், மேல்பகுதியிலும் காது, நாக்கிலும் பல முறை கரண்டியால் சூடு போட்டதற்கான தழும்புகளுடம் காணப்பட்ட நிலையில், தொடர்ந்து சித்ரவதைக்கு ஆளான அந்த இளம் பெண், தோட்டத்து மக்களால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

Related News