Sep 25, 2026
Thisaigal NewsYouTube
சமூக ஊடகங்கள்  மத தீவிரவாதத்தின் ஆயுதமாக மாறும் அபாயம்: பேராக் சுல்தான் கவலை
தற்போதைய செய்திகள்

சமூக ஊடகங்கள் மத தீவிரவாதத்தின் ஆயுதமாக மாறும் அபாயம்: பேராக் சுல்தான் கவலை

Share:

சமுதாய நல்லிணக்கத்திற்குப் பெரிய அச்சுறுத்தல் மதத் தலைவர்கள் அல்ல, மாறாக இளைஞர்களிடையே தீவிரவாதத்தைப் பரப்பும் சமூக ஊடகங்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமுமே என்று பேராக் சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷா எச்சரித்துள்ளார்.

கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 'மூன்றாவது அனைத்துலக சமயத் தலைவர்களின் உச்ச நிலை மாநாட்டில்' பிரதான உரை நிகழ்த்திய சுல்தான், ஏஐ மூலம் உருவாக்கப்படும் போலித் தகவல்கள் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான இளைஞர்களிடையே வெறுப்பையும் மதப் பிரிவினையையும் முன்னெப்போதும் இல்லாத அளவில் தூண்டிவிடப் பயன்படுத்தப்படுவதாகக் கவலை தெரிவித்தார்.

இந்த ஒலிகள் மத அறிஞர்களுடையதோ அல்லது ஆன்மீகத் தலைவர்களுடையதோ அல்ல, லாப நோக்கத்திற்காக மதத்தை ஆயுதமாக்கும் சமூக உடகங்களின் வாயிலாக மேற்கொள்ளப்படம் சதி என்றும் அவர் சாடினார்.

எனவே, மத இயக்கங்கள், டிஜிட்டல் தலைமுறையின் யதார்த்தத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு, முடிவெடுக்கும் அதிகாரத்தில் இளைஞர்களுக்குப் பொறுப்புகளை வழங்க வேண்டும் என்று சுல்தான் வலியுறுத்தினார்.

மேலும், பன்முகத்தன்மை என்பது சீரான தன்மை அல்ல என்று குறிப்பிட்ட சுல்தான், பல்வேறு இன, மொழி மற்றும் மதக் கலவையே மலேசியாவின் மிகப்பெரிய பலம் என்றும் சுட்டிக்காட்டினார்.

Related News

சமூக ஊடகங்கள் மத தீவிரவாதத்தின் ஆயுதமாக மாறும் அபாயம்: ப... | Thisaigal News