May 22, 2026
Thisaigal NewsYouTube
முதலீட்டில் 1.3 வெள்ளியை நிறுவனத்தின் இயக்குநர் ஒருவர் இழந்துள்ளார்
தற்போதைய செய்திகள்

முதலீட்டில் 1.3 வெள்ளியை நிறுவனத்தின் இயக்குநர் ஒருவர் இழந்துள்ளார்

Share:

சிரம்பான், ஜூன் 12-

கடந்த ஏப்ரல் முதல் மே மாதம் வரையில் ஆன்லைன் முதலீடு திட்டத்தில் ஈடுபட்டு ஒரு நிறுவனத்தின் இயக்குநர் 1 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமாக இழந்துள்ளார்.

அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடம் பாதிக்கப்பட்ட அந்த நிறுவனத்தின் இயக்குநர் வாட்ஸாப்ப்-யின் வாயிலாக ஒப்பந்தம் செய்து தனிப்பட்ட மற்றும் நிறுவனத்தின் பணத்தை முதலீடு செய்துள்ளார்.

இச்சம்பம் குறித்து, நேற்று தமது தரப்புக்கு புகார் ஒன்று கிடைக்கப் பெற்றதாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் முகமது ஹட்டா சே தின் கூறினார்.

கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதியிலிருந்து மே 28 ஆம் தேதி வரையில் பாதிக்கப்பட்ட அந்நபர் 16 முறை பணப் பரிமாற்றங்களை செய்திருந்தது விசாரணையில் தெரியவந்ததாக முகமது ஹட்டா ஓர் அறிக்கையில் இன்று தெரிவித்தார்.

இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 420 ஆவது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக முகமது ஹட்டா மேலும் தகவலளித்தார்.

Related News