Jul 18, 2026
Thisaigal NewsYouTube
பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் பரபரப்பு – இஸ்ரேலியர் எனக் கூறி இடையூறு செய்த பெண் கைது!
தற்போதைய செய்திகள்

பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் பரபரப்பு – இஸ்ரேலியர் எனக் கூறி இடையூறு செய்த பெண் கைது!

Share:

கோலாலம்பூரில் உள்ள பிரிட்டிஷ் தூதரகம் முன்பு நேற்று நடைபெற்ற பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டத்தில், இடையூறு விளைவித்த பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் சசாலி ஆடம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிநாட்டு நாட்டவரான அப்பெண் ஒருநாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வரும் நிலையில், அப்பெண் தன்னை இஸ்ரேலியர் என அடையாளப்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது.

இருப்பினும், போலீசாரிடம் அவர் தாம் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றவர் என்றும் தெரிவித்துள்ளதாக சசாலி குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News