Jun 9, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு மாக் மண்டின் இண்டா அடுக்குமாடி குடியிருப்பு சாவிகள் ஒப்படைப்பு
தற்போதைய செய்திகள்

பினாங்கு மாக் மண்டின் இண்டா அடுக்குமாடி குடியிருப்பு சாவிகள் ஒப்படைப்பு

Share:

பினாங்கு மாக் மண்டின் இண்டா அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தின் 187 'ரூமா முத்தியாராகு' அடுக்குமாடி வீடமைப்புத்திட்டத்தின் வீட்டு சாவிகள், பினாங்கு மேம்பாட்டுக் கழகத்திடமிருந்து பினாங்கு மாநில வீடமைப்பு வாரியத்திடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இவ்விழாவில் கலந்துகொண்ட பினாங்கு மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு, இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 29 பேருக்கு வீடு ஒதுக்கீட்டிற்கான கடிதங்களை வழங்கியதுடன் தனது வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார்.

இளைஞர்கள், பி40 மற்றும் எம்40 பிரிவினர் ஆகியோர் எளிதாக வீடு வாங்குவதற்கு உதவும் நோக்கில் 'வாடகை வழி உரிமையாக்கல்” எனும் திட்டத்தை பினாங்கு அரசு செயல்படுத்தி வருவதாக டத்தோஸ்ரீ சுந்தராஜு குறிப்பிட்டார்.

இதன் மூலம், வங்கிக் கடன் பெறுவதில் சிரமத்தை எதிர்கொள்ளும் மக்கள், முதலில் வாடகைக்குக் குடியேறி, பின்னர் குறிப்பிட்ட காலத்திற்குள் அந்த வீட்டை முழுமையாகச் சொந்தமாக்கிக் கொள்ள முடியும் என அவர் விளக்கினார்.

பட்டர்வொர்த் மாக் மண்டின் தொழிற்பேட்டைக்கு அருகில், 13 மாடிகளைக் கொண்டு கட்டப்பட்டுள்ள இக்குடியிருப்புத் திட்டம் கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி முழுமையாக நிறைவடைந்தது. மாநில மக்கள் தங்களின் தேவைக்கும் வசதிக்கும் ஏற்ப மலிவு விலை வீடுகளைப் பெறுவதை பினாங்கு அரசு தொடர்ந்து உறுதி செய்யும் என்றும் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு உறுதியளித்தார்.

இவ்விழாவில் பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் மற்றும் உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

Related News