Mar 25, 2026
Thisaigal NewsYouTube
வெப்பமான வானிலை: மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் விளையாட்டு உடைகளை அணிய அனுமதி
தற்போதைய செய்திகள்

வெப்பமான வானிலை: மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் விளையாட்டு உடைகளை அணிய அனுமதி

Share:

கோலாலம்பூர், மார்ச்.25-

நாட்டில் நிலவி வரும் வெப்பமான வானிலையைக் கருத்தில் கொண்டு, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளிப் பணியாளர்கள் முறையான விளையாட்டு உடைகளை அணிவதற்குப் பள்ளி நிர்வாகங்கள் சிறப்பு அனுமதி வழங்க வேண்டும் என கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

ஒவ்வொரு பள்ளியும், கல்விக் கழகமும் தங்கள் பகுதியின் தற்போதைய சூழலைப் பொறுத்து இந்த முடிவை எடுக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாம் தவணை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் போது, வெப்ப அலையை எதிர்கொள்ளத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்யுமாறு கல்வி அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

குறிப்பாக, வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸைத் தாண்டினால், வெளிப்புறச் செயல்பாடுகளை குறிப்பாக புறப்பாட நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், மாணவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

Related News

பினாங்கு கல்லறையல் பாலியல் செயலில் ஈடுபட்டது : ஜோடி மீது நாளை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பினாங்கு கல்லறையல் பாலியல் செயலில் ஈடுபட்டது : ஜோடி மீது நாளை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

கார்ப்பரேட் மாஃபியா ஊழல்: 'மிஸ்டர் ஆர்' (Mr. R) நான் அல்ல; என்னிடம் எந்தப் பங்குகளும் இல்லை – டத்தோ ஸ்ரீ ரமணன் மறுப்பு

கார்ப்பரேட் மாஃபியா ஊழல்: 'மிஸ்டர் ஆர்' (Mr. R) நான் அல்ல; என்னிடம் எந்தப் பங்குகளும் இல்லை – டத்தோ ஸ்ரீ ரமணன் மறுப்பு

கெந்திங் மலைச் சாலைக் கட்டண முறை: ஏப்ரல் 2 முதல் வெள்ளோட்டம் தொடக்கம்

கெந்திங் மலைச் சாலைக் கட்டண முறை: ஏப்ரல் 2 முதல் வெள்ளோட்டம் தொடக்கம்

நீலாய் அஸ்திக் கலசத் திருட்டு: 4 கலசங்கள் மீட்பு, 10 பேரிடம் விசாரணை

நீலாய் அஸ்திக் கலசத் திருட்டு: 4 கலசங்கள் மீட்பு, 10 பேரிடம் விசாரணை

கொலை வழக்கில் முதியோர் இல்ல ஊழியரின் சிறைத் தண்டனை குறைக்கப்பட்டது

கொலை வழக்கில் முதியோர் இல்ல ஊழியரின் சிறைத் தண்டனை குறைக்கப்பட்டது

மத்தியக் கிழக்கில் நீடித்து வரும் மோதல்: விளைவுகளை எதிர்கொள்ள மலேசியா தயாராக வேண்டும் - தேசிய பாதுகாப்பு கவுன்சில் அறிவிப்பு

மத்தியக் கிழக்கில் நீடித்து வரும் மோதல்: விளைவுகளை எதிர்கொள்ள மலேசியா தயாராக வேண்டும் - தேசிய பாதுகாப்பு கவுன்சில் அறிவிப்பு