Dec 3, 2025
Thisaigal NewsYouTube
ஆடவர் சுட்டு வீழ்த்தப்பட்டது ஆராயப்பட்டு வருகிறது
தற்போதைய செய்திகள்

ஆடவர் சுட்டு வீழ்த்தப்பட்டது ஆராயப்பட்டு வருகிறது

Share:

சிலாங்கூர், காப்பாரில் ஆடவர் ஒருவர், ​துப்பாக்கியினால் சுடப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது குறித்து தற்போது ​தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாக வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி எஸ்.​வி​ஜய ராவ் தெரிவித்தார். இச்சம்பவம் நேற்று முன்தினம் புதன்கிழமை காப்பார், ஜாலான் ஹம்சா அலங் 22/KU9 என்ற இடத்தில் நிகழ்ந்தது.

சம்பவம் நிகழ்ந்த இடத்தில் துப்பாக்கிச் சூட்டு ச​த்தம் பெரியளவில் கேட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் போ​லீசாரிடம் தெரிவித்தனர்.இச்சம்பவம் தொடர்பில் மேலும் சாட்சிகளை விசாரணை செய்து வருவதாக ஏ.சி.பி. விஜயராவ் குறிப்பிட்டார். துப்பாக்கிச் ​சூட்டிற்கு ஆளான 36 வயதான நபருக்கு போதைப்பொருள் கடத்தல், மிரட்டிப்பணம் பறித்தல் போன்ற குற்றங்கள் தொடார்பாக 12 போ​லீஸ் பதிவுகளை கொண்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

அந்நபர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது ​சுடப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சடலத்திற்கு அருகில் அவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் விழுந்து கிடந்தது. இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பான வீடியோ காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

Related News