May 22, 2026
Thisaigal NewsYouTube
ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம்
தற்போதைய செய்திகள்

ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம்

Share:

Negeri Sembilan, Gemas, Kampung Palong 3 என்ற இடத்தில் பழமை வாய்ந்த கோயிலான ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் மாபெரும் மகா கும்பாபிஷேகம் இன்று ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

நாதஸ்வர, மேளதாள இசையுடன் காலை 9.30 க்கும் 10.30 க்கும் இடைப்பட்ட நேரத்தில் நடந்தேறிய இந்த மகா கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளின் ஆசியைப் பெற்றனர்.

செம்பனை தோட்டத்திற்கு நடுவே மிக சிறப்பான முறையில் திருப்பணி வேலைகள் முடிந்து, பக்தர்களுக்கு அருள்மழை பொழிகின்ற தோற்றத்தில் காட்சியளிக்கும் இம்மகா மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகத்திற்கு Kuala Lumpur, ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் அறங்காவலர் Dato Sivakumar Nadarajah சிறப்பு பிரமுகராக கலந்து சிறப்பித்தார்.

இந்த மகா கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த ஜூன் 14 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை முதல் அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தன.

இன்று காலை 6.30 க்கு சிறப்பு பூஜைகளுடன் தொடங்கிய இவ்வாலயத்தின் மகா கும்பாபிஷேகத்தில் பக்தி கலந்த ஓர் ஆன்மீக உணர்வுடன் பக்தர்கள் அருள் பெற்றது மட்டுமின்றி அவர்களுக்கு அம்பாளின் அருளால் பிரசாதமும் வழங்கப்பட்டது.

இந்த கும்பாபிஷேகத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டு செயற்குழுவின் தலைவரும் Palong சட்டமன்ற உறுப்பினருமான YB Tuan Hj. Mustapha Nagoor கலந்து சிறப்பித்தார்.

Related News