Dec 3, 2025
Thisaigal NewsYouTube
நடப்பு அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட ஆதரவு மறுபரிசீலனை செய்யப்படலாம் மூடா கட்சி எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

நடப்பு அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட ஆதரவு மறுபரிசீலனை செய்யப்படலாம் மூடா கட்சி எச்சரிக்கை

Share:

நாட்டின் துணைப்பிரதமரும், அம்னோ தலைவருமான டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி, லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுக்கப்பட்டது தொடர்பில் விளக்கம் அளிக்கப்படாவிட்டால் நடப்பு அரசாங்கத்திற்கு மூடா கட்சி வழங்கி வந்த ஆதரவு மறுபரிசீலனை செய்யப்படலாம் என்று அக்கட்சியின் தலைவர் சையிட் சாடிக் அப்துல் ரஹ்மான் இன்று எச்சரித்துள்ளார்.

அதேவேளையில் இவ்விவகாரம் தொடர்பில் வீதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவும் மூடா தயங்காது என்று சையிட் சாடிக் அப்துல் ரஹ்மான் நினைவுறுத்தியுள்ளார்.

அகமட் ஜாஹிட்டிற்கு எதிரான லஞ்ச ஊழல், நம்பிக்கை மோசடி மற்றும் சட்டவிரோதப் பண மாற்றம் தொடர்பாக 47 குற்றச்சாட்டுகளில் ஒரு குற்றச்சாட்டில்கூட வலுவான ஆதாரங்கள் இல்லாததைத் போல் தோற்றம் ஏற்படுத்துள்ள நிலையில், இதில் வரையறை மீறப்பட்டுள்ளதைப் போல் தெரியவந்துள்ளது என்று மூவார் எம்.பி.யுமான சையிட் சாடிக் அப்துல் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினர் விளக்கம் அளிக்க வேண்டும். மூடா கட்சியின் இந்த கோரிக்கை செவிசாய்க்கப்படவில்லை என்றால் அடுத்தக் கட்ட நகர்வை மூடா முன்னெடுக்கும் என்று சையிட் சாடிக் தெரிவித்தார்.

அகமட் ஜாஹிட்டை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம், நேற்று விடுதலை செய்து இருப்பது தொடர்பாக விவாதிப்பதற்கு மூடா கட்சி இன்று நடத்திய தனது அவசரக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சையிட் சாடிக் குறிப்பிட்டார்.

Related News