கோலாலம்பூர், மே 27-
2023ஆம் ஆண்டுக்கான SPM தேர்வு முடிவில், தேசிய சராசரி தேர்ச்சி விகிதம் - GPN, அதற்கு முந்தைய ஆண்டைவிட சிறந்த முறையில் அதிகரித்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டில் GPN விகிதம் 4.74-ஆக இருந்த நிலையில், கடந்தாண்டு 4.60-ஆக பதிவாகியுள்ளது.
மொத்தம் 11 ஆயிரத்து 713 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் சிறந்த தேர்ச்சியை அதாவது A+, A, A- ஆகிய GRED-களைப் பெற்றுள்ளனர்.
அதற்கு முந்தைய ஆண்டில் 10 ஆயிரத்து 109 மாணவர்களே அத்தகைய அடைவுநிலையைப் பதிவு செய்திருந்ததாக, கல்வி தலைமை இயக்குநர் அஸ்மான் அட்னான் தெரிவித்தார்.
அதேவேளையில், அனைத்து பாடங்களிலும் C GRED-களைப் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டில் 75 ஆயிரத்து 322 மாணவர்கள் அந்த அடைவுநிலைப் பெற்றிருந்த நிலையில், கடந்தாண்டு அந்த எண்ணிக்கை 83 ஆயிரத்து 112 மாணவர்களாக அதிகரித்துள்ளதாகவும், அஸ்மான் அட்னான் கூறினார்.








