அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மத்தியஸ்தப் பேச்சுவார்த்தையை நடத்த பாகிஸ்தான் முன்வந்துள்ளதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதற்காக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் மற்ற நட்பு நாடுகளின் தலைவர்களை அவர் பாராட்டியுள்ளார்.
முஸ்லிம் உலகில் நம்பிக்கைக்குரிய குரலாக உள்ள பாகிஸ்தான், அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைக்கு தேவையான சூழ்நிலைகளை உருவாக்கும் வலுவான நிலைப்பாட்டில் உள்ளது என அன்வார் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அமெரிக்காவும் ஈரானும் இந்த முன்மொழிவை அதே நல்ல நோக்கில் ஏற்று செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இப்பேச்சுவார்த்தையானது மோதலின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக அல்லாமல், அதனை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கான தூதரகப் பேச்சுவார்த்தைகளுக்கு இன்னும் இடம் இருக்கலாம் என்பதைக் காட்டும் அறிகுறிகளை தான் எச்சரிக்கையுனும், நம்பிக்கையுடனும் கவனித்து வருவதாகவும் அன்வார் தெரிவித்துள்ளார்.








