Oct 9, 2026
Thisaigal NewsYouTube

மித்ரா நிதி ஒதுக்கீடு 150 மில்லியன் ரிங்கிட்டாக உயர்வு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மித்ரா நிதி ஒதுக்கீடு 150 மில்லியன் ரிங்கிட்டாக உயர்வு

மலேசிய இந்திய சமூகத்தின் மேம்பாட்டுக்கான உருமாற்றப் பிரிவான மித்ராவுக்கு 2027ஆம் ஆண்டில் 150 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் 2027 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தி போது நிதி அமைச்சருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இதனைத் தெரிவித்தார்.

இந்த நிதி, குறிப்பாக இந்திய இளைஞர்களுக்குப் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்குவதில் கவனம் செலுத்தும். தொழில்துறை தானியக்கமயம், தொழில்நுட்பம், விமானப் பராமரிப்பு போன்ற துறைகளில் இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவது இதன் நோக்கமாகும்.

2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மித்ராவுக்கு 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கடந்த மே மாதம் கூடுதலாக 50 மில்லியன் ரிங்கிட் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீடு 150 மில்லியன் ரிங்கிட்டாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
மக்கள் வீட்டுத் திட்டங்களுக்கு 1 பில்லியன் ரிங்கிட்; திங்கட்கிழமை முதல் பதிவுகள்

மக்கள் வீட்டுத் திட்டங்களுக்கு 1 பில்லியன் ரிங்கிட்; திங்கட்கிழமை முதல் பதிவுகள்

பட்ஜெட் உரையில் திருக்குறளை மேற்கோள் காட்டிய அன்வார்; ‘நாடு’ அதிகாரத்திலிருந்து குறள்

பட்ஜெட் உரையில் திருக்குறளை மேற்கோள் காட்டிய அன்வார்; ‘நாடு’ அதிகாரத்திலிருந்து குறள்

ஷா ஆலாம் பகுதியில் 12 வாகனங்கள் மோதல்; இருவர் படுகாயம், இருவர் காயம்

ஷா ஆலாம் பகுதியில் 12 வாகனங்கள் மோதல்; இருவர் படுகாயம், இருவர் காயம்

லங்காவி, லாபுவான் தீவுகளில் வரியில்லா பொருள் வாங்கும் வரம்பு 10,000 ரிங்கிட்டாக உயர்வு

லங்காவி, லாபுவான் தீவுகளில் வரியில்லா பொருள் வாங்கும் வரம்பு 10,000 ரிங்கிட்டாக உயர்வு

அரசு ஊழியர்களுக்கு தலா 1,500 ரிங்கிட் சிறப்பு உதவி; ஓய்வூதியதாரர்களுக்கு 750 ரிங்கிட்

அரசு ஊழியர்களுக்கு தலா 1,500 ரிங்கிட் சிறப்பு உதவி; ஓய்வூதியதாரர்களுக்கு 750 ரிங்கிட்

இந்தியச் சமூகத்துக்கு மித்ரா மூலம் 150 மில்லியன் ரிங்கிட்; தமிழ்ப்பள்ளிகளுக்கு 50 மில்லியன், வழிபாட்டுத் தலங்களுக்கு 80 மில்லியன் ரிங்கிட்

இந்தியச் சமூகத்துக்கு மித்ரா மூலம் 150 மில்லியன் ரிங்கிட்; தமிழ்ப்பள்ளிகளுக்கு 50 மில்லியன், வழிபாட்டுத் தலங்களுக்கு 80 மில்லியன் ரிங்கிட்