Nov 25, 2026
Thisaigal NewsYouTube

கத்தியை ஏந்தி பொதுமக்களை விரட்டியவர்: நால்வர் காயம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கத்தியை ஏந்தி பொதுமக்களை விரட்டியவர்: நால்வர் காயம்

பகாங், கோலா லிப்பிஸ், கம்போங் பெர்சாங் பகுதியில் கத்தியை ஏந்தியவாறு பொதுமக்களைத் துரத்திச் சென்று தாக்கிய ஆடவர் ஒருவரால் நால்வர் காயமடைந்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை மாலை 6.36 மணியளவில் இச்சம்பவம் குறித்து பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, போலீஸ் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இதையடுத்து, மாலை 7.10 மணியளவில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, மேல் நடவடிக்கைக்காக லிபிஸ் மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அவருக்கு கோலா லிபிஸ் மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர், மனநலப் பரிசோதனைக்காக பெந்தோங் மருத்துவமனையின் மனநலப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதற்கிடையில், தாக்குதலுக்கு உள்ளான நால்வரும் பாடாங் தெங்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்களின் காயங்கள் கடுமையானவை அல்ல என்றும், அனைவரும் சீரான நிலையில் இருப்பதாகவும் லிபிஸ் மாவட்ட போலீஸ் தலைவர் இஸ்ம்யில் மான் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →