Nov 25, 2026
Thisaigal NewsYouTube

உயரதிகாரியின் அதிகார துஷ்பிரயோகத்தை அம்பலப்படுத்திய பெண் அதிகாரிக்கு பாராட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
உயரதிகாரியின் அதிகார துஷ்பிரயோகத்தை அம்பலப்படுத்திய பெண் அதிகாரிக்கு பாராட்டு

தமது உயர் அதிகாரியின் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பாகப் புகார் அளித்த மலேசிய எல்லைக் கட்டுப்பாட்டு மற்றும் பாதுகாப்பு முகமையான ஏகேபிஎஸ் பெண் அதிகாரியின் துணிச்சலை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன் வெகுவாக பாராட்டியுள்ளார்.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தில், முறையான பயண ஆவணங்கள் இல்லாத 38 வயது வெளிநாட்டுப் பெண் ஒருவர் குடிநுழைவுச் சோதனையைத் தாண்டிச் செல்ல உதவியதாகச் சந்தேகிக்கப்படும் உயர் அதிகாரி, அந்தப் பெண் அதிகாரியின் புகாரைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.

இதனைச் சுட்டிக் காட்டிய சண்முகம், பதவி மற்றும் அதிகாரம் தவறுகளுக்குப் பாதுகாப்பாக இருக்க முடியாது என்றும், நேர்மையைக் காக்க முன்வரும் அரசு ஊழியர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், சம்பந்தப்பட்ட பெண் அதிகாரியின் பணித்திறன் மற்றும் எதிர்கால வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இதற்கிடையில், புந்தோங் ஜசெக சட்டமன்ற உறுப்பினர் துளசி மனோகரனும் அந்த அதிகாரியின் துணிச்சலைப் பாராட்டியதுடன், நேர்மைக்காக அவரது தொழில் வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது என வலியுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →