Nov 25, 2026
Thisaigal NewsYouTube

நேபாளப் பேரிடர்: காணாமல் போன மலேசியர்களுக்கு அடுத்த மாதம் இறப்புச் சான்றிதழ்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நேபாளப் பேரிடர்: காணாமல் போன மலேசியர்களுக்கு அடுத்த மாதம் இறப்புச் சான்றிதழ்

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் காணாமல் போன மலேசியர்களின் குடும்பங்களுக்கு, அடுத்த மாத தொடக்கத்தில் அதிகாரப்பூர்வ இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஆர். ரமணன் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஒருவர் இறந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கான காத்திருப்பு காலம், முன்னர் 12 ஆண்டுகளாக இருந்த நிலையில், தற்போது 45 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. மனிதவள அமைச்சு மற்றும் வெளியுறவு அமைச்சு மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டதாக அவர் கூறினார்.

45 நாட்கள் காத்திருப்புக் காலம் நிறைவடைந்துள்ள நிலையில், நேபாள அதிகாரிகளிடமிருந்து தேவையான ஆவணங்கள் டிசம்பர் தொடக்கத்தில் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அந்த ஆவணங்கள் வெளியுறவு அமைச்சின் மூலம் தேசியப் பதிவுத் துறைக்குக் கிடைத்ததும், இறப்புச் சான்றிதழ்களை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரமணன் உறுதியளித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →