Nov 25, 2026
Thisaigal NewsYouTube

ரோன்97, மானியமில்லா பெட்ரோல், டீசல் விலை 25 சென் குறைவு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ரோன்97, மானியமில்லா பெட்ரோல், டீசல் விலை 25 சென் குறைவு

நாட்டில் ரோன்97 பெட்ரோல், மானியமில்லா ரோன்95 பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் நாளை முதல் லிட்டருக்கு 25 சென் குறைக்கப்படுகின்றன.

நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ரோன்97 பெட்ரோல் லிட்டருக்கு 3 ரிங்கிட் 75 சென்னாகவும், மானியமில்லா ரோன்95 பெட்ரோல் 3 ரிங்கிட் 47 சென்னாகவும், டீசல் 4 ரிங்கிட் 47 சென்னாகவும் விற்பனை செய்யப்படும்.

இதற்கிடையில், புடி95 திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரோன்95 பெட்ரோல் விலை மாற்றமின்றி லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 சென்னாகத் தொடரும்.

அதேபோல், புடி டீசல் திட்டத்தின் கீழ் டீசல் 2 ரிங்கிட் 10 சென்னாகவும், எஸ்கேபிஎஸ் திட்டத்தின் கீழ் மானிய விலையில் வழங்கப்படும் பெட்ரோல் 2 ரிங்கிட் 5 சென்னாகவும் நீடிக்கும்.

மேலும், எஸ்கேடிஎஸ் திட்டத்தின் கீழ் மானிய டீசல் விலை லிட்டருக்கு 2 ரிங்கிட் 15 சென்னாகத் தொடரும்.

இந்தப் புதிய விலைகள் டிசம்பர் 2ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →