Dec 2, 2025
Thisaigal NewsYouTube
அந்த தகவலில் உண்மையில்லை, பெல்டா விளக்கம்
தற்போதைய செய்திகள்

அந்த தகவலில் உண்மையில்லை, பெல்டா விளக்கம்

Share:

கூட்டரசு நில மேம்பாட்டு வாரியமான பெல்டா வின் புதிய தலைவராக டிஏபியின் உதவித் தலைவர் தெரெசா கொக் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவலில் உண்மையில்லை என்று அந்த நில வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

பெல்டாவின் தலைவராக செபூத்தே எம்.பி. தெரெசா கொக் நியமிக்கப்பட்டுள்ளதாக விளம்பரத்தட்டியுடன் சமூக வலைத்தளங்களின் பகிரப்பட்டு வரும் தகவல் போலியானதாகும் என்று அந்த நில வாரியம் தெரிவித்துள்ளது.

பெல்டாவின் தலைவர் தான் ஶ்ரீ இட்ரிஸ் ஜுசொஹ் வரும் ஜுன் 30 ஆம் தேதியுடன் பதவி விலகுகிறார் என்று அறிவிக்கப்பட்டதும், வெறுப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வேண்டுமென்ற தெரெசா கொக் புகைப்படத்தைப் பயன்படுத்தி அந்த விளம்பரத் தட்டி வெளியிடப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

Related News