May 22, 2026
Thisaigal NewsYouTube
வெ.5 அங் பாவ் கிடைத்ததில் அதிருப்தி, மிரட்டல் விடுத்த நால்வர் கைது
தற்போதைய செய்திகள்

வெ.5 அங் பாவ் கிடைத்ததில் அதிருப்தி, மிரட்டல் விடுத்த நால்வர் கைது

Share:

சிபுவில் Julau எம்.பி -யிடமிருந்து கிடைக்கபெற்ற 5 வெள்ளி அங் பாவில் அதிருப்தியடைந்த நான்கு ஆடவர்கள் மிரட்டல் விடுத்துள்ள குற்றத்திற்காக போலீசார் கைது செய்தனர்.

கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி சீனப்புத்தாண்டையொட்டி Pakan - னிற்கு Julau எம்.பி - யான Datuk Larry Sng Wei Shien சென்றிருந்தபோது இச்சம்பவம் நடந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

32 க்கும் 53 க்கும் உட்பட்ட வயதுடைய சந்தேகிக்கும் நபர்கள் கடந்த திங்கட்கிழமை போலீசாரால் கைது செய்யப்பட்டதாக Julau OCPD Andam Sulin தெரிவித்தார்.

அங் பாவ் தொகையை 10 வெள்ளியாக அதிகரித்து மொத்தம் 15 வெள்ளி கொடுப்பதற்கு ஜுலாவ் எம்.பி ஒப்புக்கொண்ட வேளையிலும் சந்தேகிக்கும் நபர்கள் மேலும் அதிக பணம் கேட்டு அவரின் பணியாளர்களை தொந்தரவு செய்யும் குற்றத்திற்காக அந்நால்வரும் கைது செய்யப்பட்டதாக Andam Sulin ஓர் அறிக்கையில் இன்று விளக்கினார்.

இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 506 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

Related News