Sep 23, 2026
Thisaigal NewsYouTube
கூலிமில் கோர விபத்து... 75 வயது முதியவர் பலி, 3 பேர் காயம்
தற்போதைய செய்திகள்

கூலிமில் கோர விபத்து... 75 வயது முதியவர் பலி, 3 பேர் காயம்

Share:

கூலிம், ஆகஸ்ட்.02-

கூலிம், Kelang Lama பழைய சாலையில் இன்று காலை 10.45 மணியளவில் இரண்டு கார்கள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிய கோர விபத்தில், 75 வயது முதியவரான சந்திரன் காந்தன் என். ராஜூ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், காயமடைந்த 18 வயதுடைய இரு இளம் பெண்கள் உட்பட மூவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூலிம் மாவட்ட போலீஸ் தலைவர் Shamsul bin Sinring தெரிவித்துள்ளார்.

Perodua Ativa கார் ஒன்று, முன்னால் சென்ற வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மீது பின்புறமாக மோதியதால் விபத்து ஏற்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், விபத்தை ஏற்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் 26 வயது கார் ஓட்டுநரிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனையில், அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான ஆதாரம் எதுவும் கண்டறியப்படவில்லை.

இந்த வழக்கானது சாலைப் போக்குவரத்து சட்டம் 1987-இன் பிரிவு 41(1)-ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றது.

Related News

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி -  டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி - டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்

நஜிப் மன்னிப்பு வாரியக் கூட்டக் குறிப்புகளை வெளியிட அம்பிகாவும் மரியாவும் கோரிக்கை

நஜிப் மன்னிப்பு வாரியக் கூட்டக் குறிப்புகளை வெளியிட அம்பிகாவும் மரியாவும் கோரிக்கை

அரண்மனை விவகாரத்தில் மௌனம் ஏன்? அக்மாலை சாடும் சிவமலர்

அரண்மனை விவகாரத்தில் மௌனம் ஏன்? அக்மாலை சாடும் சிவமலர்