Sep 26, 2026
Thisaigal NewsYouTube
போர்ட்டிக்சன் படகுத்துறையில் முதலைத் தாக்குதலிலிருந்து முதியவர் உயிர் தப்பினார்
தற்போதைய செய்திகள்

போர்ட்டிக்சன் படகுத்துறையில் முதலைத் தாக்குதலிலிருந்து முதியவர் உயிர் தப்பினார்

Share:

போர்ட் டிக்சனில் இன்று அதிகாலை 4 மணியளவில் படகுத்துறை ஒன்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 62 வயது முதியவரை முதலை ஒன்று காலில் கவ்வி ஆற்றுக்குள் இழுத்துச் சென்றுள்ளது.

அங்கிருந்த பெரிய பாறை ஒன்றைப் பிடித்துக்கொண்டு போராடிய அந்த முதியவர், முதலையிடமிருந்து தப்பித்துக் கரை ஏறியுள்ளார். பின்னர் குடும்பத்தினரின் உதவியுடன் போர்ட் டிக்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, தற்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. இத்தாக்குதலில் அவரது இடது கால் விரல் மற்றும் கணுக்கால் முறிந்துள்ளன.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி, எச்சரிக்கைப் பலகைகளை வைத்துள்ளனர். மேலும், பொதுமக்கள் முதலைகள் வாழும் ஆற்றுப் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related News