Jun 16, 2026
Thisaigal NewsYouTube
குப்பைக்கிடங்கில் நண்பரைக்கொன்ற பாதுகாவலர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

குப்பைக்கிடங்கில் நண்பரைக்கொன்ற பாதுகாவலர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

Share:

கோலா சிலாங்கூர், ஈஜோக் குப்பைக்கிடங்கில் தனது நண்பரை அடித்துக் கொன்றதாக 43 வயது பாதுகாவலர் துரைராஜு என்பவர் மீது கோலா சிலாங்கூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த மே 16 ஆம் தேதி, 23 வயது லெட்சுமணன் என்பவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மே பதினான்காம் தேதி உயிரிழந்தார். கூர்மையான மற்றும் கனமான ஆயுதங்களால் தாக்கப்பட்டதில் அவருக்கு மூளை ரத்தக்கசிவு மற்றும் முக எலும்பு முறிவு ஏற்பட்டது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

குற்றச்சாட்டைப் புரிந்து கொண்ட துரைராஜுவிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை. இவ்வழக்கு ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படவிருக்கிறது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை அல்லது ஆயுள் தண்டனை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் துரைராஜு குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

மரண தண்டனை அல்லது நாற்பது ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதால், வாக்குமூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இவ்வழக்கு வரும் ஜூலை இருபத்தி நான்காம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related News