Sep 26, 2026
Thisaigal NewsYouTube
ஓடும் பேருந்தில் ஓட்டுநர் திரவத்தை பாட்டிலில் ஊற்றிய வீடியோ: போலீஸ் விசாரணை
தற்போதைய செய்திகள்

ஓடும் பேருந்தில் ஓட்டுநர் திரவத்தை பாட்டிலில் ஊற்றிய வீடியோ: போலீஸ் விசாரணை

Share:

பேருந்தை ஓட்டிக்கொண்டே பிளாஸ்டிக் பையிலிருந்த ஒரு திரவத்தை பாட்டிலில் ஊற்றிய ஓட்டுநரின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, தைப்பிங் மாவட்ட போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈப்போவிற்கு அருகில் மெனோரா சுரங்கப்பாதையைத் தாண்டிய பகுதியில் இந்த ஆபத்தான சம்பவம் நடந்ததாக, வீடியோவை வெளியிட்ட பயணி த்ரெட்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பேருந்து நிறுவனம் மற்றும் ஓட்டுநரை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதற்காக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தைப்பிங் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர்அப்துல் மாலிக் இஸ்மாயில் தெரிவித்தார்.

Related News