May 25, 2026
Thisaigal NewsYouTube
வழிப்பறி, கொள்ளைக் குற்றங்களுக்குக் கடுமையான தண்டனை அவசியம்: மேல்முறையீட்டு நீதிமன்றம்
தற்போதைய செய்திகள்

வழிப்பறி, கொள்ளைக் குற்றங்களுக்குக் கடுமையான தண்டனை அவசியம்: மேல்முறையீட்டு நீதிமன்றம்

Share:

வழிப்பறி மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவோருக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பொது இடங்களில் இத்தகைய குற்றங்கள் அதிகரித்து, குறிப்பாகப் பெண்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகத்தினரிடையே அச்சத்தையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்துவதாக நீதிபதி நூரின் பாதருடின் கூறினார்.

கடந்த ஆண்டு ஜொகூரில் பெண் ஒருவரின் பையைப் பறித்து இழுத்துச் சென்ற அனுவார் ஜாலி என்ற முன்னாள் தொழிற்சாலை ஊழியருக்கு, உயர் நீதிமன்றம் குறைத்த சிறைத்தண்டனையை ரத்து செய்த மேல்முறையீட்டு நீதிமன்றம், செஷன்ஸ் நீதிமன்றம் விதித்த 7 ஆண்டுகள் சிறை மற்றும் 3 பிரம்படிகளை மீண்டும் உறுதி செய்தது.

குற்றத்தை ஒப்புக்கொள்வது மட்டுமே தண்டனையைக் குறைப்பதற்கான தானியங்கி காரணியாகாது என்றும், பொதுமக்களின் பாதுகாப்பைக் குலைக்கும் இத்தகைய ஆபத்தான குற்றங்களுக்கு நீண்ட காலச் சிறைத்தண்டனை மிக அவசியம் என்றும் நீதிபதி நூரின் பாதருடின் சுட்டிக்காட்டினார்.

Related News

குப்பைக்கிடங்கில் நண்பரைக்கொன்ற பாதுகாவலர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

குப்பைக்கிடங்கில் நண்பரைக்கொன்ற பாதுகாவலர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஓடும் பேருந்தில் ஓட்டுநர் திரவத்தை பாட்டிலில் ஊற்றிய வீடியோ: போலீஸ் விசாரணை

ஓடும் பேருந்தில் ஓட்டுநர் திரவத்தை பாட்டிலில் ஊற்றிய வீடியோ: போலீஸ் விசாரணை

கின்னஸ் டிராஃப்ட் தரத்தை நுகர்வோரே மதிப்பிடலாம்; மலேசியாவில் 'ரேட் யுவர் பின்ட்' புதிய பிரச்சாரம் அறிமுகம்!

கின்னஸ் டிராஃப்ட் தரத்தை நுகர்வோரே மதிப்பிடலாம்; மலேசியாவில் 'ரேட் யுவர் பின்ட்' புதிய பிரச்சாரம் அறிமுகம்!

போர்ட்டிக்சன் படகுத்துறையில் முதலைத் தாக்குதலிலிருந்து முதியவர் உயிர் தப்பினார்

போர்ட்டிக்சன் படகுத்துறையில் முதலைத் தாக்குதலிலிருந்து முதியவர் உயிர் தப்பினார்

விசாக தினத்தை முன்னிட்டு செக் கியா ஈன் ஆலயத்தில் பல்லாயிரக்கணக்கானோருக்கு இலவச உணவு வழங்கப்பட்டது

விசாக தினத்தை முன்னிட்டு செக் கியா ஈன் ஆலயத்தில் பல்லாயிரக்கணக்கானோருக்கு இலவச உணவு வழங்கப்பட்டது

புக்கிட் காசிங் மகா சிவன் ஆலயத்தில் நாளை குருபெயர்ச்சி சிறப்பு பூஜை

புக்கிட் காசிங் மகா சிவன் ஆலயத்தில் நாளை குருபெயர்ச்சி சிறப்பு பூஜை