Jun 12, 2026
Thisaigal NewsYouTube
புக்கிட் காசிங் மகா சிவன் ஆலயத்தில் நாளை குருபெயர்ச்சி சிறப்பு பூஜை
தற்போதைய செய்திகள்

புக்கிட் காசிங் மகா சிவன் ஆலயத்தில் நாளை குருபெயர்ச்சி சிறப்பு பூஜை

Share:

புக்கிட் காசிங் மலைமீது வீற்றிருக்கும் மகா சிவன் ஆலயத்தில் நாளை மே 26-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை குருபெயர்ச்சி சிறப்பு நிகழ்வு மற்றும் வழிபாடுகள் நடைபெறவுள்ளன.

நாளை மாலை 4.30 மணிக்கு குரு பகவானுக்கு விசேஷ அபிஷேகத்துடன் விழா தொடங்கவுள்ளது. அதனைத் தொடர்ந்து, மாலை 5.30 மணிக்கு நித்ய பூஜையும், மாலை 6.00 மணிக்கு மகா தீபாரதனையும் சிறப்பாக நடைபெறும் என ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

இக்குருபெயர்ச்சி வழிபாட்டில் கலந்துகொண்டு அர்ச்சனை மற்றும் பரிகார பூசைகள் செய்ய விரும்பும் பக்தர்கள், அதற்குரிய கட்டணத்தைச் செலுத்தி தங்களின் பெயர் விவரங்களைப் பதிவு செய்து ரசீதைப் பெற்றுக் கொள்ளுமாறு ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related News