Mar 16, 2026
Thisaigal NewsYouTube
ஒத்துழைப்பு அவசியம் - மற்றவரைக் கைகாட்டுவது தீர்வாகாது
தற்போதைய செய்திகள்

ஒத்துழைப்பு அவசியம் - மற்றவரைக் கைகாட்டுவது தீர்வாகாது

Share:

பெத்தாலிங் ஜெயா,ஜன.30
மக்களின் சுபிட்சத்தை நிலை நிறுத்த, மக்கள் பிரதிநிதிகளுடனும், ஊராட்சி மன்றங்களுடனும் புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை ஒத்துழைத்து செயல்பட வேண்டும் என டிஏபி-ஐச் சேர்ந்த கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் தெரிவித்தார்.

குறிப்பாக, நகர்புற திட்டமிடலில் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து பணி புரிந்து தீர்வு காண வேண்டுமே அன்றி, மற்றவரைக் கைகாட்டி குறை சொல்வது எந்தப் பயனையும் கொடுக்காது என பிரகாஷ் குறிப்பிட்டார்,

நேற்று, கில்ளானில் உள்ள ஹொக்கியான் சங்க மண்டபத்தில், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ கணபதிராவுக்கும் புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் ஷுஹைலி சயின் க்கு இடையே கடுமையான விவாவதம் அரங்கேறியது.

மக்களின் பாதுகாப்பையும் சுபிட்சத்தையும் கருத்தில் கொள்ளாமல் அரசியல்வாதிகளும் ஊராட்சி மன்றங்களும் நகர்புற திட்டமிடல் பணிகளை மேற்கொண்டு வருவதாக ஷுஹைலி குற்றஞ்சாட்டினார்.

ஆனால், நகர்புற திட்டமிடலில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மட்டுமே சம்பந்தப்படுவதாகவும் எல்லா சட்டமன்ற உறுப்பினரும் அதில் அங்கம் பெறுவதில்லை என கணபதிராவ் பதிலளித்தார்.

Related News