Sep 12, 2026
Thisaigal NewsYouTube
தலைகீழாக தேசியக் கொடி: ஜோகூரில் இருவர் கைது
தற்போதைய செய்திகள்

தலைகீழாக தேசியக் கொடி: ஜோகூரில் இருவர் கைது

Share:

ஜோகூர், கூலாய் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தேசியக் கொடியும் ஜோகூர் மாநிலக் கொடியும் தலைகீழாக ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் நேப்பாள நாட்டைச் சேர்ந்த ஆடவர் ஒருவரும், உள்ளூர் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

34 மற்றும் 48 வயதுடைய இருவரும் நேற்று திங்கட்கிழமை காலை 10.45 மணியளவில் கைது செய்யப்பட்டதாக கூலாய் மாவட்ட போலீஸ் தலைவர் தான் செங் லீ தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பான படம் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து போலீஸ் துறை விசாரணை மேற்கொண்டு இருவரையும் அடையாளம் கண்டு கைது செய்ததுடன், இரு கொடிகளையும் பணிப் பட்டியலையும் பறிமுதல் செய்துள்ளது.

பாதுகாவலராக பணியாற்றும் நேப்பாள ஆடவரே கொடிகளை தலைகீழாக ஏற்றியிருக்கலாம் என்றும், அவரிடம் கொடிகளை வழங்கி ஏற்றுமாறு உத்தரவிட்டது அந்தப் பெண் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இருவருக்கும் முந்தைய குற்றப் பதிவுகள் இல்லை என்றும், போதைப்பொருள் சோதனையில் இருவரும் எதிர்மறை முடிவைப் பெற்றுள்ளதாகவும் Tan Seng Lee தெரிவித்தார்.

Related News

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி