Sep 7, 2026
Thisaigal NewsYouTube
கோலாகெட்டிலில் மானிய எல்.பி.ஜி முறைகேடு – 57,638 ரிங்கிட் பொருட்கள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

கோலாகெட்டிலில் மானிய எல்.பி.ஜி முறைகேடு – 57,638 ரிங்கிட் பொருட்கள் பறிமுதல்

Share:

கெடா, பாலிங் மாவட்டம், கோலாகெட்டிலில் உள்ள ஒரு செம்பனைத் தோட்டத்தில் மானிய விலையில் வழங்கப்படும் எல்.பி.ஜி எரிவாயுவை முறைகேடாக மாற்றும் நடவடிக்கையை உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் அமலாக்க அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.

நேற்று மதியம் நடத்தப்பட்ட சோதனையில், 14 கிலோ எடையுள்ள 30 எல்.பி.ஜி சிலிண்டர்கள், 50 கிலோ எடையுள்ள 10 தொழில்துறை எரிவாயு சிலிண்டர்கள், 17 குழாய்கள் மற்றும் ஒரு மோட்டார் லாரி உட்பட மொத்தம் 57 ஆயிரத்து 638 ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சோதனை நடத்தப்பட்டபோது சந்தேக நபர்கள் எவரும் அங்கு இல்லை. அதிகாரிகளின் வருகையை அறிந்து அவர்கள் தப்பிச் சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து 1961ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் 21ஆவது பிரிவின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது என்று கெடா மாநில உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவினத் துறை இயக்குநர் ஹாஜி முகமாட் நிஜாம் பின் ஜமாலுடின் தெரிவித்துள்ளார்.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து