Mar 17, 2026
Thisaigal NewsYouTube
மன்னிப்பு வாரியம் எழுத்துப்பூர்வமான விளக்கத்தை தர வேண்டும்
தற்போதைய செய்திகள்

மன்னிப்பு வாரியம் எழுத்துப்பூர்வமான விளக்கத்தை தர வேண்டும்

Share:

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் சிறைத் தண்டனை காலத்தை குறைத்து இருக்கும் மன்னிப்பு வாரியம் எழுத்துப்பூர்வமாக விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று பாசீர் கூடாங் பிகேஆர் எம்.பி. ஹாஸ்ஸான் அப்துல் காரிம் கேட்டுக்கொண்டார்.

கைதி ஒருவருக்கு தண்டனையை குறைப்பது அல்லது அகற்றவது என்பது மன்னிப்பு வாரியத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டதாகும். ஆனால், நஜீப் விவகாரத்தில் எதற்காக மன்னிப்பு வாரியம் இத்தகைய ஒரு முடிவு செய்துள்ளது என்பதற்கு நியாயப்பூர்வமான காரணங்களை எழுத்துப்பூர்வ வடிவில் கொடுக்குமானால் அந்த விளக்கத்தின் வாயிலாக மக்கள் மனநிறைவு கொள்ள வாய்ப்பு உள்ளது என்று ஒரு சட்ட வல்லுநருமான ஹாஸ்ஸான் அப்துல் காரிம் குறிப்பிட்டார்.

Related News