Jul 27, 2026
Thisaigal NewsYouTube
காலுறை விவகாரத்தில் டாக்டர் அக்மல் சாலிஹ் இஸ்லாமியர்களின் குரலை பிரதிநிதிக்கிறார்!
தற்போதைய செய்திகள்

காலுறை விவகாரத்தில் டாக்டர் அக்மல் சாலிஹ் இஸ்லாமியர்களின் குரலை பிரதிநிதிக்கிறார்!

Share:

ஆயர் கேரோஹ், மார்ச் 22.

'அல்லா' எனும் சொல் பொறிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய காலுறை விவகாரத்தில், அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டாக்டர் முகமது அக்மல் சாலிஹ் தொடர்ந்து குரலெழுப்பி வருவதில், அடிப்படை காரணம் உள்ளது.

அனைத்து தரப்பினர்களின் மனதை பாதிக்கச்செய்துள்ள அவ்விவகாரத்தில்,மெர்லிமாவு சட்டமன்ற உறுப்பினருமான அவர், நாடு முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்களின் குரல்களை பிரதிநிதித்து அவ்வாறு குரலெழுப்புவதாக, மலாக்கா முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ ஏபி ரவூப் யூசோஹ் தெரிவித்தார்.

நாம் அனைவரது சமயத்திற்கும் மதிப்பளிக்க வேண்டும். காலுறையில் 'அல்லா' எனும் சொல் இடம்பெற்றிருந்தது, இஸ்லாமியர்களின் மனதை பாதித்துள்ளது. சம்பந்தப்பட்ட காலுறைகளை தயாரித்து விற்கப்பட்ட விவகாரத்தில், சமயத்தைத் தற்காக்கும் தங்களது கொள்கையை, அரசியலுக்காக மாற்றிக்கொள்ளப்படாததை அவர் சுட்டிக்காட்டினார்.

அதுப்போன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க, அதனை சாதாரணமாக கருதிவிடாமல் உரிய முறையில் தீர்வு காணப்பட வேண்டுமெனவும் டத்தோ ஶ்ரீ ஏபி ரவூப் யூசோஹ் வலியுறுத்தினார்.

முன்பாக, சர்ச்சைக்குரிய காலுறைகளை விற்ற KK MART கடையை புறக்கணிக்க வேண்டுமென டாக்டர் முகமது அக்மல் சாலிஹ் முன்னெடுத்த பிரச்சாரத்திற்கு டிஏபி தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்