Grand Prix (GP) Formula Satu (F1) பந்தயத்தை சிப்பாங்கில் உள்ள பெட்ரோனாஸ் அனைத்துலகப் பந்தயத் தடத்திற்கு மீண்டும் கொண்டுவரப்படாது என பெட்ரோனாஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மதிப்புமிக்க மோட்டார்ஸ்போர்ட் போட்டியை 2026 ஆம் ஆண்டில் மீண்டும் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அனைத்துலக செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டத் தகவலைத் தொடர்ந்து, பெட்ரோனாஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை மலேசிய இந்தப் போட்டியை ஏற்று நடத்தும் நாடாக இருந்தது, நுழைவுச் சீட்டின் விற்பனை குறையும் நிலை ஏற்பட்டதோழி ஏற்பாட்டுச் செலவு அதிகமானதால் இப்போட்டி நடத்தப்படுவதில் இருந்து கைவிடப்பட்டது.
இருப்பினும் MotoGP போன்று இதர போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தன.








