Sep 28, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு சீனக் கல்லறையில் பாலியல் நடவடிக்கை: இருவருக்கும் தலா 1 வருடம் சிறை
தற்போதைய செய்திகள்

பினாங்கு சீனக் கல்லறையில் பாலியல் நடவடிக்கை: இருவருக்கும் தலா 1 வருடம் சிறை

Share:

பினாங்கில் உள்ள சீனக் கல்லறை ஒன்றில் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்ட இருவர் மீது இன்று வியாழக்கிழமை ஜார்ஜ்டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

58 வயதுடைய எம். ஜெகதீசன் மற்றும் 37 வயதுடையஹலிலா அபு பக்கர் ஆகியோர், இன்று வியாழக்கிழமை காலை சுமார் 8.30 மணியளவில், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீதிபதி நைம் முகமட் சைடி முன்னிலையில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோது குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

இதனையடுத்து, பொது இடத்தில் ஒழுக்கக் கேடான செயல்களில் ஈடுபட்டதற்காக குற்றவியல் சட்டம் பிரிவு 377D-இன் கீழ் இருவருக்கும் தலா 12 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

தண்டனையை குறைக்க வேண்டுமென, குற்றம் சாட்டப்பட்ட இருவரின் சார்பில் வழக்கறிஞர் ஆர். புரன் தரன் கோரிக்கை விடுத்தார்.

எனினும், துணை அரசு தரப்பு வழக்கறிஞர் லாவ் ஷவின், இருவருக்கும் கடுமையான தண்டனை விதிக்க நீதிமன்றத்தை வலியுறுத்தினார்.

Related News

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு  எம்.சரவணன் விமர்சனம்

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு எம்.சரவணன் விமர்சனம்

பினாங்கு சீனக் கல்லறையில் பாலியல் நடவடிக்கை: இருவருக்கும்... | Thisaigal News