May 22, 2026
Thisaigal NewsYouTube
பெண்ணிடம் கொள்ளையடித்த வெளிநாட்டு பிரஜை
தற்போதைய செய்திகள்

பெண்ணிடம் கொள்ளையடித்த வெளிநாட்டு பிரஜை

Share:

கோத்தா கினாபாலு, மார்ச் 4 -

கோத்தா கினாபாலு, காயா ஸ்த்ரிட் டில் உள்ள தங்கும் விடுதிற்கு அருகே வங்கியில் பணிபுரியும் முதியவர் ஒருவர் வெளிநாட்டு ஆடவரினால் தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி காலை 6:30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 50 வயது முதியவர் மரக்கட்டையால் தாக்கப்பட்டதில் தலையில் பலத்த காயங்களுக்கு ஆளாகினார்.

பாதிக்கப்பட்ட அந்த வயோதிகர் பணியிடத்திற்கு சென்று கொண்டிருக்கும் போது திடீரென்று பின் புறத்தில் இருந்து வந்த அவ்வாடவர் கட்டையால் தாக்கி கொள்ளையடிக்க முற்பட்டதாக கோத்தா கினாபாலு மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரின்டென்டன் கல்சோம் இட்ரிஸ் தெரிவித்தார்.

அந்த மூதாட்டி தன்னை தற்காத்துக் கொள்ள பலமுறை முயற்சித்த போது அது தோல்வியுற்றதாகவும் சந்தேகிக்கும் நபர் மேலும் அவரை தாக்கியதுடனும் கைப்பையையும் பறித்து தப்பி சென்றதாக Kalsom Idris நேற்று ஓர் அறிக்கையில் கூறினார்.

Related News