Sep 23, 2026
Thisaigal NewsYouTube
தென்கொரியாவில் மலேசிய இளைஞர் குத்திக் கொலை: உடலைத் தாயகம் கொண்டு வர பெற்றோர் கோரிக்கை
தற்போதைய செய்திகள்

தென்கொரியாவில் மலேசிய இளைஞர் குத்திக் கொலை: உடலைத் தாயகம் கொண்டு வர பெற்றோர் கோரிக்கை

Share:

கோம்பாக், ஜூலை.28-

தென் கொரியாவில் குத்திக்கொலை செய்யப்பட்ட மலேசிய இளைஞரின் உடலை விரைவாக தாய்நாட்டுக்குக் கொண்டு வர அரசாங்கம் உதவ வேண்டும் என அவரது தாயார் Zulfah Fadliani உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

26 வயதான Ahmad Shah Ahmad Ros, கடந்த சனிக்கிழமை தென் கொரியாவின் வடக்கு Chungcheong மாநிலம், Eumseong County-யில் நடந்த தெருச் சண்டையில் குத்திக் கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக 40 வயதுடைய மற்றொரு மலேசியர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் தென் கொரியாவில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வந்த அகமட் ஷா, தனது பெற்றோர் மற்றும் இரு உடன்பிறப்புகளின் வாழ்வாதாரத்திற்காக உழைத்து வந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

7 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் டிசம்பர் மாதம் அவர் மலேசியாவிற்குத் திரும்பத் திட்டமிட்டிருந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related News