Sep 23, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் அரச குடும்பம் குறித்து சர்ச்சை வீடியோ: 11 புகார்கள்; போலீஸ் விசாரணை
தற்போதைய செய்திகள்

நெகிரி செம்பிலான் அரச குடும்பம் குறித்து சர்ச்சை வீடியோ: 11 புகார்கள்; போலீஸ் விசாரணை

Share:

சிரம்பான், ஜூலை.28-

நெகிரி செம்பிலான் அரச குடும்பம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம் பெற்றதாகக் கூறப்படும் டிக்டாக் காணொளி குறித்து 11 புகார்கள் கிடைத்ததைத் தொடர்ந்து, போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இது குறித்து நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் Alzafny Ahmad கூறுகையில், அந்த காணொளியின் உள்ளடக்கம் மற்றும் பேச்சின் சூழல் தொடர்பாக 1954 தேர்தல் குற்றச் சட்டம் பிரிவு 4(1), குற்றவியல் சட்டம் பிரிவு 505(b) மற்றும் 1998 தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், விசாரணையை பாதிக்கும் வகையில் யாரும் ஊகங்களை பரப்பவோ அல்லது அந்த வீடியோவை பகிரவோ கூடாது என்றும், இனம், மதம் மற்றும் அரச குடும்பம் (3R) தொடர்பான உணர்வுபூர்வமான கருத்துகளை சமூக ஊடகங்களில் வெளியிடுவதைத் தவிர்க்குமாறும் அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Related News